Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ துணையோடு ஆப்கான் தற்காலிக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

mukesh by mukesh
September 8, 2021 8:16 AM GMT+5:30

அமெரிக்க காவல்துறையால் தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்டுள்ள தலிபான்களில் ஒருவரான சிராஜூதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறப்போவதாக அமெரிக்க படைகள் அறிவித்த நிலையில், காபூலில் அரச படைகளும் பின்வாங்கின. இதனைத் தொடர்ந்து அங்கு தலிபான்கள் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றினர்.

கடந்த மாத இறுதியில் அமெரிக்க படைகள் முழுமையாக அங்கிருந்து வெளியேறிய நிலையில், ஒரு வாரத்துக்குப் பின் தலிபான்கள் இடைக்கால அரசுக்கான பிரதிநிதிகளை அறிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய தலைவர்கள் தற்போது வெளியாகியுள்ள இடைக்கால அரசில் முக்கிய இடம்பெற்றுள்ளனர்.

இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த், தலிபான் நிறுவர்களில் ஒருவரான முல்லா உமரின் நெருங்கிய கூட்டாளியாவார். சமயத் தலைவர் என்பதைவிட, ராணுவ தளபதியாக அறியப்பட்ட ஹசன் அகுந்த், தற்போது, முக்கிய முடிவுகளை எடுக்கும் தலிபான் குழுவின் தலைவராக உள்ளார்.

பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட, முல்லா அப்துல் கனி பரதர் முதலாவது துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் முல்லா அப்துல் கனி பரதர்.

இரண்டாவது, துணை பிரதமராக முல்லா அப்துல் சலாமும், முல்லா உமரின் மகனான முல்லா முகம்மது யாகூப் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜூதீன் ஹக்கானி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 19 பேரும் தலிபான்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர், தலிபான்கள் அல்லாதவர்களையும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கை மதிக்கப்படவில்லை. இடைக்கால அரசு எவ்வளவு நாட்கள் ஆட்சியில் இருக்கும்? எப்போது தேர்தல் நடத்தப்படும்? போன்ற கேள்விகளுக்கும் தலிபான்கள் பதில் அளிக்கவில்லை.

இதனிடையே, ஆப்கான் புதிய அரசு அமைவதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பின் இயக்குநர் பயஸ் ஹமீது, கடந்த வாரம் காபூல் பயணம் மேற்கொண்ட நிலையில், புதிய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“அமெரிக்காவின் தடைகளுக்கு பணிய மாட்டோம்” — ஈரான் திட்டவட்டம்

இன்று தொடங்குகிறது மகளிர் ஆசியக் கோப்பை; இந்தியா களமிறங்குவது எப்போது?

அமெரிக்காவை தாக்கினால் இதுவரை இல்லாத பதிலடி

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் நிர்வாகிகளை தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், அதை ஏற்க முடியாது என அந்நாட்டின் தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்று இரு முறை கூடும் தமிழக சட்டப்பேரவை

Next Post

இதுவா பிரேக்கிங் செய்தி? தயாரிப்பாளரின் கோவம்!!

Next Post

இதுவா பிரேக்கிங் செய்தி? தயாரிப்பாளரின் கோவம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026 11:13 PM GMT+5:30

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026 10:59 PM GMT+5:30

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026 2:36 PM GMT+5:30

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026 1:36 PM GMT+5:30

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026 11:51 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version