பொருளாதார நெருக்கடியை ஒப்புக்கொண்ட அதிபர் பெசெஷ்கியன்; “பேச்சுவார்த்தைக்கும் தயார், நாட்டின் நலன்களைப் பாதுகாப்போம்” என அறிவிப்பு
அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளுக்கு அடிபணியப் போவதில்லை என்றும், நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்போம் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பிரச்னைகளுக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளையும் நிராகரிக்கவில்லை என்று தெஹ்ரான் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய தடைகள் என்ன?
அமெரிக்க கருவூலத் துறையின் Office of Foreign Assets Control (OFAC), ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஈரான் தொடர்பான புதிய sanctions பட்டியலை வெளியிட்டது. இதில் ஈரானைச் சேர்ந்த Reza Mohammad Taeedi மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த Kameng Trading Limited ஆகியவை அமெரிக்காவின் Specially Designated Nationals பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் Taeedi, Bank Melli Iran உடன் தொடர்புடையவர் என்று OFAC பதிவு குறிப்பிடுகிறது.
அமெரிக்க கருவூலத் துறையின் பதிவின்படி ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஈரான் தொடர்பாக பல கட்டங்களில் sanctions நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 7, 20, 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் Iran-related நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.
“உறுதியாக எதிர்கொள்வோம்”
இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் தடைகளை “நியாயமற்றவை” என்று விமர்சித்துள்ள ஈரான் அரசு, அவற்றுக்கு எதிராக உறுதியாக நிற்கப்போவதாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கு ராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
பொருளாதார பாதிப்பை ஒப்புக்கொண்ட ஈரான் அதிபர்
ஈரான் அதிபர் Masoud Pezeshkian, அமெரிக்காவின் தடைகள் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போதைய சூழலை போர் கால நிலைமையாகக் கருதி அதற்கேற்ப செயல்பட வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பையும் ஈரான் முழுமையாக நிராகரிக்கவில்லை.
கல்வித் துறையிலும் தாக்கம்
அமெரிக்காவின் தடைகள் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறையுடன் மட்டும் நின்றுவிடாமல் கல்வித் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. அமெரிக்க OFAC அதிகாரப்பூர்வப் பதிவின்படி, ஈரானுடன் கல்விசார் பரிமாற்றங்கள் மற்றும் சில கல்விச் சேவைகளை அனுமதித்த General License G, ஆகஸ்ட் 24 முதல் suspended செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுப் பரிமாற்றங்கள் தொடர்பான General License F-ம் அதே நாளிலிருந்து suspended செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெளிநாடுகளில் உயர் கல்விக்குச் செல்ல முயலும் ஈரானிய மாணவர்களுக்கான சில சர்வதேச மொழி மற்றும் நுழைவுத் தேர்வுகளை அணுகுவதிலும் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து வரும் நிலையில், “தடைகளுக்கு எதிர்ப்பு; அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை திறந்தே வைத்திருப்பது” என்ற இரட்டை அணுகுமுறையை ஈரான் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.





