அமெரிக்க முகாம்களை தாக்கினால் இதுவரை இல்லாத அளவிற்குப் பதிலடி தருவோம் என ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலும்,ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் இருபக்கமும், முக்கியமான கட்டடங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக சண்டையிட்டால் அமெரிக்க, பிரிட்டன் முகாம்களை தாக்குவோம் என ஈரான் எச்சரித்திருந்தது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், விரும்பினால் இரு நாடுகளுக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்பட அமெரிக்கா உதவும் என அறிவித்திருந்தார்.

அதேவேளையில், அமெரிக்க முகாம்களை தாக்கினால் இதுவரை இல்லாத அளவிற்குப் பதிலடி தருவோம் என ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கையும் விடுத்துள்ளார் ட்ரம்ப். ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த அமெரிக்காவின் உதவியை இஸ்ரேல் நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.