நடிகர் வடிவேலுவின் 61வது பிறந்த தினம் என்பதால் அவர் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி, இயக்குனர் சுராஜ் ஆகியோருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த பிறந்தநாள் புதிதாக பிறந்ததுபோல் உள்ளது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. சாதித்து விட்டதாக நினைக்கவில்லை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை. பெரிய படம், சின்ன படம் என நினைக்க மாட்டேன். மக்களை சிரிக்க வைப்பதே எனது கடமை என்றார்.