நடிகரும், எழுத்தாளருமான நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

கே.பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் அறிமுகமானவர் ராஜேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு என 150 படங்களுக்கும் மேலாகப் பணியாற்றியவர் ராஜஷ், எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் உள்ளிட்ட முகங்களையும் கொண்டவர். ராமாபுரம் வீட்டில் வசித்த வந்த அவருக்கு இன்று காலை குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆளுநர் ரவி, ரஜினிகாந்த், வைரமுத்து, பாரிவேந்தர், திலகபாமா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட உள்ளன.