வெளிநாட்டு சேவை விதிமுறைகள் அடிப்படையில், பிரதிநிதிகள் மூலம் தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை, தேசிய மகளிர் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் ஆகஸ்ட்-27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதவி மற்றும் காலியிடங்கள் :
- தனியார் செயலாளர் (Private Secretary) – 06
நிறுவனம் : தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women – NCW)
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.மேலும் அவர்கள் கொடுத்துள்ள தகுதி பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தெரிந்தெடுக்கப்படுவர்.கணினி மற்றும் சுருக்கெழுத்து (120 wpm) அறிந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் (DOPT வழிகாட்டுதலின்படி).
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : National Commission for Women Plot No. 21, Jasola Institutional Area, New Delhi -110025.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.08.2020
தேர்வு முறை : தேர்வு பிரதிநிதிகள் அடிப்படையில் இருக்கும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!




