அடுத்தடுத்து நடிகர் அர்ஜூன் வீட்டில் சோகம்!

அடுத்தடுத்து நடிகர் அர்ஜூன் வீட்டில் சோகம்!

அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் மீளாத நிலையில், சிரஞ்சீவி சார்ஜா மற்றும் அர்ஜுனின் சகோதரரும், நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

அடுத்தடுத்து வீட்டில் தொடர்ந்து நடக்கும் சோக சம்பவத்தால் அர்ஜூன் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *