நஸ்ரியா- ஃபாசில் தம்பதியர் வாங்கிய சொகுசுக் கார் இணையதளத்தில் வைரல்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை நஸ்ரியா. இவர் நேரம் ராஜாராணிம் திருமணம் என்னும் நிக்காஹ், நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான ஃபாசில்.
இந்த தம்பதியினர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள், இவர்கள் வெளியிடும் கருத்துகளும் , புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும்.
இந்நிலையில், பாசில்- நஸ்ரியா நட்சத்திரத் தம்பதியினர் ஜெர்மனியைச் சேர்ந்ந்த பிரபல நிறுவனமான ஃபோர்ச்சே (orsche’s 911 Carrera costs )- என்ற சொகுசுக் காரை வாங்கியுள்ளனர்.
இந்தக் காரின் மதிப்பு 1.90 கோடி ரூபாய் ஆகும்.
இந்நிலையில், இந்தக் காரை தனது ரசிகர்களின் பார்வைக்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.