இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் : திரையுலகினர் அதிர்ச்சி

இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் : திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று காலை தனியார் மருத்துமனை ஒன்றில் மரணமடைந்தார்.

தமிழ் திரையுலகில் பிரபல திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் (54) கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் இன்று அதிகாலை 3 மணியளவில் கே.வி. ஆனந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் இந்த தீடிர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோ, அயன். மாற்றான், கவண், காப்பான் போன்ற பலவேறு திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருந்த இவர் தற்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலை சார்ந்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *