கீதா கோவிந்தம் படத்தில் வரும் ‘இங்கே இங்கே இங்கே காவாலே’ என்ற பாடல் மூலமும் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தன்னா. இவர் தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த விழா ஒன்றில் இவர் அணிந்து வந்த சிவப்பு லெஹங்கா அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கிறன. இதை இருவரும் மறுத்து வந்த நிலையில் தங்களது கருத்துகளை தனித்தனியே தெரிவித்துள்ளனர்.
’காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா இதுகுறித்த கேள்விக்கு, அவர் எனது டார்லிங். ஆனால், நாங்கள் இருவரும் இன்னும் டேட்டிங் செய்யவில்லை என்றார். மற்றொரு பேட்டியில் பேசிய ராஷ்மிகா, நான் சிங்கிள்தான். யாருடனும் எந்த உறவிலும் இல்லை என பதிலளித்தார்.

தெலுங்கு திரையுலகில் ராஷ்மிகா,விஜய் தேவரகொண்டா ஜோடி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஜோடி என்பதால் அடிக்கடி இதுபோன்ற கிசுகிசுக்கள் வருவதாக கூறுகின்றனர்.




