பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மரணம்

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மரணம்

பிரபல பின்னணி திரையிசை பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49.

பொன்னியின் செல்வன்” பாடகர் பாம்பா பாக்யா காலமானார்.! – Cinebloopers | Tamil  Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராவணன் படத்தில் பாடகராக அறிமுகமானார். எந்திரன் 2.0 படத்தில் புள்ளினங்கால், சர்க்கார் படத்தின் சிம்டாங்காரன், பிகில் படத்தின் காலமே என்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் பொன்னிநதி பாடலை பாடியிருந்தார். இதுதவிர, சர்வம் தாளமயம், அன்பறிவு, இரவின் நிழல், ஆக்சன், ராட்சசி போன்ற திரைப்படங்களிலும், பல ஆல்பங்களிலும் பாடியுள்ளார்.

சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், உடல்நலக் குறைவால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *