தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ரெஜினா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, பார்டர், சூர்ப்பநகை உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரெஜினா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஆண்கள், மேகி நூடுல்ஸ் இரண்டுமே 2 நிமிடங்கள்தான் என்று கூறுகிறார். இதை, அருகில், சாப்பிட்டுக்கொண்டே கேட்டுக்க்கொண்டிருந்த நிவேதா தாமஸால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த ஏ ஜோக் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.