துருவ நட்சத்திரம் திரைப்படம் டிசம்பரில் ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
![Dhruva Natchathiram release date - When Will Dhruva Natchathiram Release? Get Dhruva Natchathiram Cast, Teaser Details Here - News](https://i0.wp.com/img.fresherslive.com/latestnews/images/articles/origin/2020/10/25/dhruva-natchathiram-release-date-5f94939c1b53e-1603572636.jpg?ssl=1)
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்,ரித்துவர்மா, சிம்ரன், பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். 2017ம் ஆண்டு ஆரம்பமான இப்படம் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வெளியாகமலேயே பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் இயக்குநர் கவுதம் மேனன், கடந்த மாதம் நட்சத்திரங்கள் சீரமைக்கப்படும் என பதிவிட்டு விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
![Chiyaan Vikram & Gautham Menon hints at the revival of 'Dhruva Natchathiram' - Tamil News - IndiaGlitz.com](https://i0.wp.com/igimages.gumlet.io/tamil/home/gvm-vikram282022m2.jpg?ssl=1)
![Dhruva Natchathiram Fan Photos | Dhruva Natchathiram Photos, Images, Pictures # 61978 - FilmiBeat](https://i0.wp.com/www.filmibeat.com/fanimg/movie/12721/dhruva-natchathiram-photos-images-61978.jpg?ssl=1)
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் துருவ நட்சத்திரம் படம் டிசம்பரில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு அடுத்தப்படமாக துருவ நட்சத்திரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.