25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போடும் ஜெயிலர்….

25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போடும் ஜெயிலர்….

ஜெயிலர் திரைப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் படத்தை இயக்கியிருந்தார். இதில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன் லால், சுனில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அதிரடி கிளப்பி வசூலை அள்ளியது. அதன்படி, உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது ஜெயிலர்.

படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிக்கு விலை உயர்ந்த BMW X7 மாடல் காரை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *