டைம்லூப் கான்செப்ட்டில் கலக்கும் மாநாடு ட்ரைலர்… ரிபீட் மோடில் போட்டு பார்க்கும் STR ரசிகர்கள்

டைம்லூப் கான்செப்ட்டில் கலக்கும் மாநாடு ட்ரைலர்… ரிபீட் மோடில் போட்டு பார்க்கும் STR ரசிகர்கள்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியள்ளது. இந்நிலையில் இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் அரசியல் படமாக இருக்கும் என்று எண்ணினால், ஹாலிவுட்டில் Release ஆகி பட்டைய கிளப்பிய Tenet படம் போல் ரீவைண்ட் மோடில் ட்ரைலர் வெளியிடப்பட்டு இருப்பது ரசிகர்களை மேலும் குழப்பி இருக்கிறது. இது டைம் மெஷின் படமா? என்கிற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது.

டைம் லூப் கான்செப்ட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அரசியலையும் தாண்டிய விசயங்கள் இருக்கும் என்பது உறுதிபட தெரிகிறது. இந்த டிரெய்லரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *