சுசி லீக்ஸ் சுசித்ரா பிக்பாஸ் வீட்டினுள்… இனி நடக்க போவது என்ன?

சுசி லீக்ஸ் சுசித்ரா பிக்பாஸ் வீட்டினுள்… இனி நடக்க போவது என்ன?

பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டின் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைய இருக்கிறார்.

Suchithraa

பாடகி சுசித்ரா முதன் முதலில் வானொலி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு சினிமாவில் பின்னணி பாடகியாக இருக்கிறார்.

இவர் கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களில் நடித்த கார்த்திக்கின் முன்னாள் மனைவி ஆவார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் காபி வித் சுஜி என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சுமூகமாக சென்று கொண்டிருந்த இவரது திரைப்பயணத்தில் புயல் அடித்தது போல் வெளியானது தான் சுசி லீக்ஸ்.

திடிரென்று ஒரு நாள் இவரது டிவிட்டர் பக்கத்தில் அவர் காயம் பட்டது போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் தனுஷின் பாதுகாவலர்கள் அவரை தாக்கியதாகவும் நடிகர் தனுஷ் அவரை வன்புணர்ந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

நடிகர்கள் தனுசு, அனுயா, அன்சிகா, அனிருத், சஞ்சிதா செட்டி, மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் படங்களையும் அட்டவணை போட்டு வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது கணவர் கார்த்திக் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

சில நாட்களிலேயே இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு சுசித்ரா வெளிநாடு சென்று சிகிச்சைகள் மேற்கொண்டு மீண்டும் தனது பணிகளுக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பேர் போன பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க உள்ளார். இவர் வீட்டிற்குள் சென்ற ப்ரோமோவும் வெளியாகி விட்டது.

சுசித்ராவை சுற்றி ஏற்கனவே ஆயிரம் சர்ச்சைகள். இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டில் எப்படி இருப்பார் என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *