2022 பொங்கலையும், தீபாவளியையும் டார்கெட் செய்த தளபதி!!

2022 பொங்கலையும், தீபாவளியையும் டார்கெட் செய்த தளபதி!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இந்நிலையில் பீஸ்ட் படத்தினை 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை தில் ராஜூ தயாரிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் 2022ம் ஆண்டு தீபாவளிக்கு இத்திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனவும் செய்திகள் வெளியாகிள்ளது.

இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமாகமடைந்துள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *