விரைவில் தாத்தா ஆகிறார் விக்ரம்.. சந்தோஷத்தில் சியான் குடும்பம்!

விரைவில் தாத்தா ஆகிறார் விக்ரம்.. சந்தோஷத்தில் சியான் குடும்பம்!

சியான் விக்ரம் விரைவில் தாத்தா ஆகப் போகிறார் என்ற சந்தோஷமான செய்தி ஒன்று கசிந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் சியான் விக்ரம்.

நடிகர் விக்ரமை தொடர்ந்து அவரது மகனும் ஹீரோவாகி விட்டார். விரைவில் இருவரும் இணைந்து நடிக்கவும் உள்ளனர்.

1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிறந்த நடிகர் விக்ரமுக்கு தற்போது 54 வயதாகிறது. 1992ம் ஆண்டு ஷைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். த்ருவ் விக்ரம் என்ற மகனும், அக்‌ஷிதா மகளும் உள்ளனர். த்ருவ் விக்ரம் நடிகராகவும், அக்‌ஷிதா பெரிய இடத்து மருமகளாகவும் உள்ளார்.

ஒட்டுமொத்த ரசிகர்களும் சியான் விக்ரம் என செல்லமாக நடிகர் விக்ரமை அழைத்து வரும் நிலையில், நடிகர் விக்ரமை தாத்தா என்றழைக்க, விரைவில் பேரக் குழந்தை பிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் குடும்பத்தினர் சூழ சின்ன கொண்டாட்டம் ஒன்றும் நடைபெற உள்ளது.

குடும்பத்தில் தாத்தா ஆனாலும், கோலிவுட்டில் சியான் விக்ரம் எப்போதுமே யங் ஹீரோ தான். கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், சியான் 60 என விக்ரமின் தரமான படங்களுக்கு அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் த்ருவ் விக்ரமுடனும் இணைந்து நடிக்கப் போகிறார் விக்ரம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *