நீங்கள் ஒரு மனிதருடன் தான் பேசுகிறீர்களா? இந்த கேள்வியைக் கேட்பதற்கான தருணம் வருவதற்கு இன்னும் அதிக காலம் இல்லை. Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. உதாரணமாக Flipkart, amazon போன்ற நிறுவனங்களில் ஏதாவது ஒரு பொருளைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அந்நிறுவன அதிகாரியுடன் நீங்கள் தொடர்பு கொள்வீர்கள். நாம் நம்மைப் போன்ற சக மனிதருடன் தான் பேசுகிறோம் என்று நினைத்தால் அது தவறு. ஐபோன்களில் நாம் பயன்படுத்தி வரும் SIRI APPல் இருந்து பலவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே. சினிமாவில் காட்டப்படுவது போன்று மனித வடிவில் மனிதர்களை கட்டுப்படுத்துவதைப் போன்று செயற்கை நுண்ணறிவு ரோபோட்கள் இருக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. சாதாரனமாக செய்யப்படும் கூகுள் Searchன் மூலம் கிடைக்கும் பதில்கள் கூட நாம் இருக்கும் இடம், இதற்கு முன் என்னவெல்லாம் தேடியிருக்கிறோம், விளம்பரதாரர்களுக்கு, என செயற்கை நுண்ணறிவுடனேயே செயல்படுகிறது.
தற்காலத்தில் பெரும்பாலும் Narrow Artificial intelligence அல்லது Weak Artificial intelligence எனப்படும் ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும் சிறப்பாக செய்யும் ரோபோட்களே பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இன்னும் சிறிது காலத்தில் General Artificial Inteligence எனப்படும் பொதுவான அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படும் ரோபோட்கள் கண்டுபிடிக்கப்படும். General AI எனப்படுபவை Narrow AI போல ஒரு சில செயல்பாடுகளில் மட்டும் மனிதர்களை விட சிறப்பாக செயல்படாமல் பல்வேறு கடினமான பணிகளையும் எளிதாக தீர்க்கக்கூடியவையாக இருக்கும்.

வரும்காலங்களில் செயற்கை நுண்ணறிவு சமூகத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை. உங்களது வங்கி பணப் பரிமாற்றங்களை உங்களுக்காக செய்வது, smart home எனும் பெயரில் உங்கள் வீடுகளை நீங்கள் வருவதற்கு முன்னரே உங்களுக்காக தயார் செய்து வைப்பது, உங்கள் கார்களை கட்டுப்படுத்துவது, உங்களுக்கு வழிகாட்டும் Mapஆகவும், உங்கள் Pacemaker லேப்டாப் போன்ற கருவிகளையும் கூட கட்டுப்படுத்தும். இதன் மூலம் உங்களது வேலை பெருமளவு குறைந்தாலும் அவை Hack செய்யப்பட்டால் உங்கள் நிலை கவலைக்கிடம் தான். செயற்கை நுண்ணறிவினால் தற்போது வரை பல பயன்களையே நாம் அனுபவித்து வந்தாலும் அவற்றால் பெரும் ஆபத்தே நமக்கு இருப்பதாக புகழ் பெற்ற விஞ்ஞானியான Stephen hawking, Space x நிறுவனர் ELON musk போன்றவர்களும் எச்சரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் மனிதன் யார் எந்திரம் எது என்பதில் கூட சந்தேகம் ஏற்படலாம் எனக் கருதுகின்றனர்.நாம் யாருடன் பேசுகிறோம் என்பதே தெரியாமல் போவதற்கான சூழல் உள்ளது. அதற்கான தீர்வாக தற்போது AKQA எனும் நிறுவனம் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது. நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பதை கண்காணிக்கும் கருவி. கடிகாரத்தைப் போல கைகளில் அணிந்துகொள்ளலாம். நீங்கள் செயற்கை நுண்ணறிவு எந்திரத்துடன் பேசும்போது அவை உங்களுக்கு சமிஞ்ஞைகளைத் தரும். இதில் வேடிக்கையான தகவல் என்னவென்றால் இவையும் அடிப்படையில் ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவி தான். ANTI AI AI எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவை செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கு எதிராக செயல்படும் செயற்கை நுண்ணறிவுக் கருவியாக பார்க்கப்படுகிறது.