Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

காதலியுடன் பேசிய இளைஞனை மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொன்ற கொடூரம்..!!

November 20, 2021

காதலியுடன் பேசிய இளைஞனுக்கு புடவை கட்டிவிட்டு, மரத்தில் கட்டி வைத்து பெண்ணின் குடும்பத்தினர் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பட்ரா தாலுகா சோகாரி கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான ஜெய்ஷ் ராவல் என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், தனது மகளுடனான காதலை முறித்துக் கொள்ளுமாறு பெண்ணின் வீட்டார், ஜெய்ஷ் ராவலை மிரட்டியுள்ளனர். ஆனால், இதனை கண்டுகொள்ளாத ராவலோ, காதலியை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.

ஆபாச படத்தை வைத்து மிரட்டிய கல்லூரி மாணவர்… ஆளை வைத்து தீர்த்துக்கட்டிய பள்ளி மாணவிகள்…

ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு…! பஞ்சாயத்து தலைவர் கொலை!!

`விரைவில்…’ போஸ்டரை நிஜமாக்கிய கொலைக்கும்பல்- திருச்சியில் நிஜமாகிப் போன சர்ச்சை போஸ்டர்!

இந்த நிலையில், நேற்று வழக்கம் போல காதலர்கள் இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்போது, இதனைப் இளம்பெண்ணின் தாயார் பார்த்ததைக் கண்டு, ராவல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து, எவ்வளவு சொல்லியும் கேட்காததால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை காளிதாஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ராவல் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு தனியாக இருந்த ராவலை வெளியே இழுத்து வந்து, புடவை அணிவித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில், அவர் மயக்கமடைந்த நிலையிலும், தொடர்ந்து தாக்கியுள்ளனர். இதையறிந்த ராவலின் குடும்பத்தினர், அங்கு செல்வதற்கு முன்பு, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

மரத்தில் கட்டப்பட்டு படுகாயங்களுடன் மயக்கநிலையில் இருந்த ராவலை அவரது உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ராவலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் ராவலின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, காளிதாஸ் மற்றும் அவரது உறவினர்களான கிரன் மாலி, மோகன் மாலி, ரமேஷ் மாலி ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியீடு குறித்து படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Next Post

‘தங்கத் தந்தை’ பட்டம்…. குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா… கரூர் ஆட்சியர் அசத்தல் அறிவிப்பு!!

Next Post

'தங்கத் தந்தை' பட்டம்…. குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா… கரூர் ஆட்சியர் அசத்தல் அறிவிப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026

விஜய் பேச்சால் மீண்டும் விவாதமாகும் ‘மிசா’… MISA என்றால் என்ன? இந்திய ஜனநாயக வரலாற்றில் என்ன நடந்தது?

September 7, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version