திருமணத்திற்கு மீறிய உறவு… அந்த ஒரு சொல்… ப்ரீத்தி எடுத்த விபரீதமுடிவு… போலீசார் அதிர்ச்சி

திருமணத்திற்கு மீறிய உறவு… அந்த ஒரு சொல்… ப்ரீத்தி எடுத்த விபரீதமுடிவு… போலீசார் அதிர்ச்சி

காதலனை கொன்று உடலை சூட்கேசில் எடுத்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Image

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் திலாமோர் ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் பெரிய டிராலி சூட்கேசை இழுக்க முடியாமல் இழுத்து வந்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் சூட்கேசை திறக்குமாறு கூறியுள்ளனர். இதையடுத்து ஓட முயற்சித்த அவரை மடக்கிப் பிடித்து சூட்கேசை திறந்தபோது அதில் வாலிபர் ஒருவரின் உடல் இருந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு நடந்த விசாரணையில், அவர் பெயர் ப்ரீத்தி சர்மா என்பதும் கடந்த 3 வருடங்களாக கணவனை பிரிந்த நிலையில் பிரோஸ் என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

ப்ரீத்தி சர்மா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் பிரோஸிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு பிரோஸ், “நீ ஒரு தந்திரமான பெண், நீ உன் கணவருக்கு விசுவாசமாக இல்லை. நீ எப்படி எனக்கு விசுவாசமாக இருப்பாய்” எனக் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ப்ரீத்தி, பிரோஸின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின் உடலை பெரிய டிராலி சூட்கேசில் வைத்து மறைவான இடத்திற்கு சென்று போட நினைத்துள்ளார். அதற்கான முயற்சியில் இறங்கும் போது போலீசாரிடம் மாட்டிக் கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *