கிரண்பேடி பிரிவை தாங்க முடியாமல் கதறிய எஸ்.பி

கிரண்பேடி பிரிவை தாங்க முடியாமல் கதறிய எஸ்.பி

புதுச்சேரி கிழக்கு எஸ்.பி ஒருவர் கிரண்பேடி பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய சம்பவம் நடந்துள்ளது.

புதுவை மாநில கவர்னராக இருந்த கிரண்பெடி அம்மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், அரசு திட்டங்களை முடக்குவதாகவும் ஆளுங்கட்சியினர் புகார் தெரிவித்து வந்தனர். இதையொட்டி அவரை திரும்ப பெறக் கோரி தர்ணா, உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம் என பல்வேறு போராட்டங்களில் காங்கிரஸ் ஈடுபட்டது. கவர்னரை கண்டித்து கடந்த  மாதம் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து கவர்னர் மாளிகையை சுற்றிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடற்கரை, அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பெடி நீக்கப்பட்டார். புதிய கவர்னராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி பிரிவை தாங்க முடியாமல் புதுச்சேரி கிழக்கு எஸ்.பி. ரட்சனா சிங் கண்ணீர் விட்டு அழுதார். இது காண்போரையும் கண்கலங்கச் செய்தது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *