Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

தன் வினை தன்னை சுடும்… வழக்கு தொடர்ந்த மாணவிக்கே அபராதம் விதித்த நீதிமன்றம்!!! என்ன காரணம் தெரியுமா???

October 28, 2020
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி வசுந்தரா, நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதால் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார். ஆனால் விசாரணையில், மாணவி வசுந்தரா எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல், பொய் வழக்கு தொடர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவிக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் அம்ராவதி நகரை சேர்ந்த மாணவி வசுந்தரா போஜன், கடந்த மாதம் நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதினார். கடந்த சில முன் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவி வசுந்தரா பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றார். இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்த மாணவி வசுந்தரா, “10-ஆம் வகுப்பு தேர்வில் 93.4% மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பு தேர்வில் 81.85% மதிப்பெண்களும் பெற்றுள்ளதாகவும், நீட் தேர்வில் 600 மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை அதுல் சந்துர்கர், நிதின் சூரியவன்ஷி அடங்கிய நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. மேலும், இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய சுகாதாரத் துறை, கல்வித் துறை உள்ளிட்டவை அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து மாணவி வசுந்தரா போஜனின் விடைத்தாளை தேசிய தேர்வு முகமை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த விடைத்தாள், எந்தவொரு கேள்விக்கும் விடை அளிக்கப்படாமல், வெறும் வெற்றுத்தாளாக இருந்தது தெரியவந்துள்ளது.

விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை – உயர்நீதிமன்றம் காட்டம்

தோனியின் வாக்குமூலத்தைப் பெற ஆணையர் நியமனம்!

மூன்றாம் பாலினத்தவர் திருமணத்திற்கு சட்ட அனுமதி

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும், மாணவி வசுந்தரா தனது குற்றச்சாட்டில் உறுதியாகவே இருந்தார்.

இதனைதொடர்ந்து மாணவியின் வழக்கறிஞர் மாணவியிடம் தனியாக பேசியபோது, மாணவி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின் மாணவியின் வழக்கறிஞர் நீதிபதிகளிடம், “மாணவி வசுந்தரா நீட் தேர்வில் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை எனவும், பயத்தினாலும், தனது தவறை மறைக்க நினைத்ததாலும், பெற்றோர் உட்பட அனைவரிடமும் பொய் கூறியுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும், மாணவின் சார்பில் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவியின் இந்த செயலுக்கு கடும் கண்டனமும், அதிருப்தியும்  தெரிவித்த நீதிபதிகள், மாணவி வசுந்தராவுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்க உள்ள இந்திய அணி.. தேதியை சொன்ன பிசிசிஐ

Next Post

ஒரு ஸ்கூட்டர் வாங்கினால் மற்றொன்று இலவசம்.. ஆஃபரை அள்ளிப் போட்ட ஒகினவா நிறுவனம்

Next Post

ஒரு ஸ்கூட்டர் வாங்கினால் மற்றொன்று இலவசம்.. ஆஃபரை அள்ளிப் போட்ட ஒகினவா நிறுவனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version