நாளை முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர் இயங்க அனுமதி !

நாளை முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர் இயங்க அனுமதி !

இந்தியாவில் நாளை முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர் இயங்க அனுமதி.

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டது என்ற செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அதிக சினிமா ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தியாவில்  எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில் மத்திய அரசு வரும் அக்டோபர் 15 ஆம் தேதி திரையங்குகள் 50 % இருக்கைகளுடன்  இயங்கலாம் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பு பலகோடி மக்களுக்கும் , திரைத்துறையினருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,  நாளை ( அக்டோபர் -15 ) முதல் சில மாநிலங்களில் 50 % இருக்கைகளுடன் திரையரங்குகள் இயக்கவுள்ளது.

எனவே, இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பிரசித்திப் பெற்ற மால்கள் உள்ளிட்ட தியேட்டர்கள் சுத்தம் செய்யப்பட்டு நாளைப் புதுப்படங்களை வெளியிடத் தயாராகி வருகின்றன.

பல புதிய படங்கள்,பெரிய நடிகர்களின்  படங்கள் திரையரங்கில்தான் வெளியிடபடுமெனக் கூறியதால் நீண்ட நாட்கள் கழித்துத் தங்களின் படம் தியேட்டரில் பார்க்க நட்சத்திரங்களும் ஆவலுடன் உள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *