பல்வேறு துறையில் ஜூனியர் எஞ்சினியருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, எஸ்.எஸ்.சி. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

நிறுவனம் : எஸ்.எஸ்.சி. (Staff Selection Commission – (SSC))
பணியிடம் : இந்தியா முழுவதும்
பணி : ஜூனியர் எஞ்சினியர்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.10.2020
வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது தளபதிக்கு 30 முதல் 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது தளர்வு : SC, ST – 5 வருடம், OBC- 3 வருடம். மேலும் பிற நபர்களுக்கான வயது தளர்வு விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
கல்வித் தகுதி : டிப்ளமோ அல்லது பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_je_01102020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!




