மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

பணி : மூத்த உதவி பொறியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 10

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.1,20,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 20.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : DGM(HR).Bharat Electronics Limited Ghaziabad. P.O. Bharat Nagar, Sahibabad, Ghaziabad(U.P.)-201010

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.500

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *