Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

போக்குவரத்துக் கழக மேலாளரை கைது செய்க – அன்புமணி

June 9, 2025

ஓட்டுனரை காலணியால் அடித்த போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநரை, போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் செருப்பால் அடித்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், எந்தத் தவறும் செய்யாத அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுனரை  அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் காலணியால் அடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அதற்குக் காரணமாக உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும் அவரை காணொலியில் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டு ஒதுங்கியிருப்பது  அதைக் விடக் கொடுமையானது.  போக்குவரத்துக்கழகம் மற்றும் காவல்துறையின் இந்த அணுகுமுறை  கண்டிக்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர் எந்தத் தவறும் செய்யவில்லை.  மாறாக,  பேருந்தை இயக்கும்படி பயணிகள் கோரிய போது உயரதிகாரியான  மேலாளர் ஆணையிட்டால் தான் இயக்க முடியும் என்று கூறியுள்ளார்.  இதில் எந்தத் தவறும் இல்லை. இது தொடர்பாக  உதவி மேலாளரிடம் பயணிகள் முறையிட்ட போது,  பயணிகளை தரக்குறைவாக பேசிய  உதவி மேலாளர், சம்பந்தப்பட்ட ஓட்டுனரை தாம் அணிந்திருந்த காலணியால்  அடித்திருக்கிறார்.  இது மன்னிக்க முடியாத குற்றம்.

ஓட்டுனரை உதவி  மேலாளர் காலணியால் தாக்கும் காணொலி வைரலாகி வரும் நிலையில்,  அதனடிப்படையில் விசாரணை நடத்தி  உதவி மேலாளர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஓட்டுனர் அளித்த புகாரின்  அடிப்படையில் வழக்குப்  பதிவு செய்யப்பட்டு  அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அதற்கு பதிலாக நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்பதாக  உதவி மேலாளரை காணொலி வெளியிடச் செய்திருக்கிறது அரசு.

இது  அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்பதைத் தவிர வேறில்லை. பொதுமக்கள் மத்தியில் ஒருவரை எவரேனும் காலணியால் தாக்கும்பட்சத்தின்  அவர் காணொலியில் மன்னிப்பு கேட்டால் போதுமானது என்றால்,  பலரும் முன்கூட்டியே மன்னிப்பு காணொலிகளை பதிவு செய்து வைத்து விட்டு,  யாரை வேண்டுமானாலும் காலணியால் தாக்குவார்கள்.

இப்படி ஒரு சூழலைத் தான்  தமிழக அரசு, போக்குவரத்துக் கழகம், காவல்துறை ஆகியவை விரும்புகின்றனவா? என்பதை அரசு விளக்க வேண்டும். அரசின் கடமை நிர்வாகம் செய்வது தான், கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.  ஓட்டுனர் தாக்கப்பட்டதற்கு காரணமான  உதவி மேலாளர் உடனடியாக  கைது செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில்  நடவடிக்கை எடுக்கத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கடைமடை இயக்க அணை – போராட்டம்

Next Post

சைக்கிளிங் வீராங்கனைகளுக்கு உதவி

Next Post

சைக்கிளிங் வீராங்கனைகளுக்கு உதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026

விஜய் பேச்சால் மீண்டும் விவாதமாகும் ‘மிசா’… MISA என்றால் என்ன? இந்திய ஜனநாயக வரலாற்றில் என்ன நடந்தது?

September 7, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version