சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று வரும் சைக்கிளிங் வீராங்கனை ஜே.நிறைமதிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாட்டின் துணை முதலைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு வீராங்கனைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, திறமையுள்ள எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

இதன் மூலம் ஏராளமான விளையாட்டு வீரர் – வீராங்கனையருக்கு உதவிகளைச் செய்து வரும் நிலையில், சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று வரும் சைக்கிளிங் வீராங்கனை ஜே.நிறைமதி அவர்களுக்கு ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டிலான அதிநவீன சைக்கிளிங் உபகரணத்தையும், சைக்கிளிங் வீராங்கனை ஜெ.பி.தன்யதா அவர்களுக்கு சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் சிறப்பு பயிற்சி மேற்கொள்ள 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி வாழ்த்தினோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.