ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது ஊரடங்கு விதிகளை மீறியதாக தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு தியாகதுருகம் கட்சி சார்பில் வரவேற்பும், கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க அலுவலக திறப்பும் சமீபத்தில் நடந்தது.கள்ளக்குறிச்சியில் பாஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்தும் வைத்தார்.

இந்த அலுவலக திறப்பு விழாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும்,சமூக இடைவெளி எதுவும் கடைபிடிக்காமல் இருந்ததாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில் பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும்,144 தடை உத்தரவுகளை மீறி 100க்கு மேற்பட்டோர் ஒன்று கூடியது உள்ளிட்ட விதிமீறல் பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *