குடிபோகும் போதே ஆட்டம் கண்ட புளியந்தோப்பு கட்டடம்.. முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யும் நிபுணர் குழு!!

குடிபோகும் போதே ஆட்டம் கண்ட புளியந்தோப்பு கட்டடம்.. முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யும் நிபுணர் குழு!!

புளியந்தோப்பு அடுக்குமாடி வீடுகளின் தரம் குறித்த முழுமையான அறிக்கையை முதல்வரிடம் நிபுணர் குழு அளிக்க உள்ளனர்.

சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது அங்கு குடியேறிய மக்கள் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன.

குற்றசாட்டுகள் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கட்டிடத்தின் தரத்தை ஐஐடி சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, கட்டுமான குறைபாடு குறித்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேறியது. கவனக்குறைவாக இருந்த குற்றசாட்டில் குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஐஐடி சிறப்பு குழு, கடந்த 17-ஆம் தேதி இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், இன்று முதல்வரிடம் வீடுகளின் தரம் குறித்த முழுமையான அறிக்கையை அளிக்கவிருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *