சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34,856-க்கு விற்பனையாகி வருகிறது.

இந்திய குடும்பங்களில் தங்கத்தினை சிறந்த சேமிப்பாக கருதுவர். மாதந்தோறும் தங்கத்தில் முதலீடு செய்வதை பெண்களும் விரும்புவர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 208 குறைந்து ரூ.34,856-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,357-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.90-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




