பாஜக கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டது…

பாஜக கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டது…
பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவருக்கு கொரோன தோற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான வினய் சகஸ்ரபுட்டே, கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோன பரிசோதனை செய்து அதில் நெகடிவ் என வந்தவுடன் பாஜக கட்சி கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின்னர் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மீண்டும் அவர் கொரோன பரிசோதனைக்கு கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரின் கொரோன ரிசல்ட் பொசிட்டிவ் என வந்துள்ளது. இதனால் அந்த கூட்டத்தில் பங்கேற்ற பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியது யாதெனில் ‘எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் டாக்டர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும்’ என்று கூறி உள்ளார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடக பாஜக எம்பி அசோக் கஸ்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *