உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணி : ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 20 ஆயிரம்

உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணி : ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 20 ஆயிரம்

உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணி ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 20 ஆயிரம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துபாய் :

இந்திய தயாரிப்பு பிரியாணியும் துபாயில் விரும்பி உண்ணப்படுகிறது. துபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டாரன்ட்டில் ராயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரியாணியில் 23 கேரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பிளேட்  அலங்கரிக்கப்பட்ட   பிரியாணியின் விலை  ரூ. 20 ஆயிரம் ஆகும். கிட்டத்தட்ட 6 பேர் ஒரு பிளேட் பிரியாணியை உண்ண முடியும்.உணவகத்தின் முதல் ஆண்டை  குறிக்கும் வகையில் மெனுவில் ராயல் கோல்ட் பிரியாணி  சேர்க்கப்பட்டுள்ளது.

பாம்பே போரோ ரெஸ்டாரன்ட் துபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ராயல் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரியாணியுடன் காஷ்மீர் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ், மற்றும் மலாய் சிக்கன் ஆகியவையும் வழங்கப்படும். பிரியாணியில் சாப்பிடக் கூடிய தங்கம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வெறும், 45 நிமிடங்ளில் இந்த பிரியாணியை தயாரித்து வழங்குகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *