Sunday, October 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மீண்டும் இயற்கையின் மடியில்; காட்டில் விடப்பட்ட 2 பெருங்கானமயில்கள்!

Seithialai desk by Seithialai desk
October 4, 2026 5:47 PM GMT+5:30

ஜெய்சல்மர், ராஜஸ்தான்: அழிவின் விளிம்பில் உள்ள பெருங்கானமயில்களைப் பாதுகாக்கும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக, சிறைப்பெருக்க முறையில் வளர்க்கப்பட்ட இரண்டு ஆண் பெருங்கானமயில்கள் இன்று இயற்கை வாழிடத்தில் விடப்பட்டன.

ஜெய்சல்மரில் உள்ள பாலைவன தேசியப் பூங்காவின் சாம் பகுதியில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்த இரண்டு பறவைகளையும் இயற்கை வாழிடத்தில் விடுவித்தார். ராஜஸ்தான் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சஞ்சய் சர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பக்சாவில் மீண்டும் புலியின் கர்ஜனை!

பத்து ஆண்டுகால முயற்சி

இந்திய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் களப் பணியாளர்களின் ஏறத்தாழ பத்து ஆண்டுகாலத் தொடர் முயற்சியால் இந்த முக்கியமான நிலை எட்டப்பட்டுள்ளதாக பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

பெருங்கானமயில் பாதுகாப்புத் திட்டம் இதுவரை இனப்பெருக்க மையங்களில் பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியது. தற்போது சிறைப்பெருக்கத்தில் வளர்க்கப்பட்ட பறவைகளை மீண்டும் இயற்கை வாழிடத்தில் வாழச் செய்யும் அடுத்தகட்டத்துக்கு இத்திட்டம் முன்னேறியுள்ளது.

பாதுகாப்பு மையங்களில் 97 பறவைகள்

சாம் மற்றும் ராம்தேவ்ரா பாதுகாப்பு மையங்களில் தற்போது மொத்தம் 97 பெருங்கானமயில்கள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் 40 பறவைகள் இயற்கையில் இடப்பட்ட முட்டைகளிலிருந்து உருவானவை; 57 பறவைகள் சிறைப்பெருக்க முறையில் பிறந்தவை.

இந்தப் பறவைகளில் 86 இனப்பெருக்கத்திற்காகப் பராமரிக்கப்படுகின்றன. 11 பறவைகள் இயற்கை வாழிடத்தில் விடுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவற்றில் இரண்டு ஆண் பறவைகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

சிறைப்பெருக்கத் திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டில் 24 குஞ்சுகளும், 2026ஆம் ஆண்டில் 29 குஞ்சுகளும் உயிருடன் பொரிக்கப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

200 சதுர கிலோமீட்டர் பாதுகாக்கப்பட்ட புல்வெளி

பெருங்கானமயில்களின் வாழிடத்தைப் பாதுகாக்க, பாலைவன தேசியப் பூங்காவுக்குள் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வேலியிடப்பட்ட புல்வெளிப் பகுதிகளை ராஜஸ்தான் வனத்துறை உருவாக்கியுள்ளது. இப்பகுதிகள் அந்தப் பறவைகளின் முக்கிய இனப்பெருக்க வாழிடங்களாக இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இன்று விடப்பட்ட பறவைகளின் இயக்கம் மற்றும் இயற்கைச் சூழலுக்கு அவை தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் விதம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அடுத்தடுத்த பறவைகளை விடுவிப்பதற்கான நடைமுறைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ராஜஸ்தான் வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் இணைந்து இந்தப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

‘நான்கே மாதங்களில் ரீல் அறுந்து விட்டதே!’ விஜய்க்கு ஸ்டாலின் 4 கேள்விகள்!

Next Post

இந்தியக் கருவின் வயதைக் கணிக்கும் AI; 2027–28ல் பயன்பாட்டுக்கு இலக்கு!

Next Post

இந்தியக் கருவின் வயதைக் கணிக்கும் AI; 2027–28ல் பயன்பாட்டுக்கு இலக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மூன்று தங்கம்; இந்திய ஹாக்கியின் சாதனை நாயகன் மன்பிரீத்!

October 4, 2026 6:58 PM GMT+5:30

897 ஓய்வூதியக் குறைகளுக்கு நாளை ஒரே மேடையில் தீர்வு!

October 4, 2026 6:45 PM GMT+5:30

இந்தியக் கருவின் வயதைக் கணிக்கும் AI; 2027–28ல் பயன்பாட்டுக்கு இலக்கு!

October 4, 2026 5:56 PM GMT+5:30

மீண்டும் இயற்கையின் மடியில்; காட்டில் விடப்பட்ட 2 பெருங்கானமயில்கள்!

October 4, 2026 5:47 PM GMT+5:30

‘நான்கே மாதங்களில் ரீல் அறுந்து விட்டதே!’ விஜய்க்கு ஸ்டாலின் 4 கேள்விகள்!

October 4, 2026 5:10 PM GMT+5:30

லூலாவா, போல்சனாரோவா? பிரேசிலில் இன்று பலப்பரீட்சை!

October 4, 2026 2:52 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version