Friday, October 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

விநாயகர் ட்விட்டர் படம் சர்ச்சை விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின்….

saravanan by saravanan
August 24, 2020 8:03 PM GMT+5:30 - Updated on August 25, 2020 9:33 AM GMT+5:30
தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் விநாயகரின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமாக தி.மு.கவிலிருந்து விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், உதயநிதியின் ட்விட் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

இன்று அவருடைய அறிக்கையில், ‘மத்திய பாசிச பா.ஜ.க மற்றும் மாநில அடிமை எடுபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையில் புகைப்படத்தைப் பகிர்ந்ததைப் பரபரப்பாக விவாதிக்கிறார்கள்.

“திருமாவளவன்தான் எனது அரசியல் ஆசான்” – சட்டப்பேரவையில் உதயநிதி நெகிழ்ச்சி!

விலைவாசி உயர்வு: சட்டப்பேரவையில் உதயநிதி, இபிஎஸ் சரமாரி கேள்வி!

சைக்கிளிங் வீராங்கனைகளுக்கு உதவி

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறு திரிப்பதைப் பார்க்கையில் இங்கு எது நடந்தாலும் அதைக் கழகத்துக்கு எதிரானதாகத் திசை திருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளைப் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிந்த ஒன்று.

எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு. அதில், எங்கள் மூதாதையர்களின் உருவப் படங்கள் மற்றும் , என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டுச் செய்வது எங்கள் வழக்கம். இந்நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக என் அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார். அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என் மகள், இந்த சிலையை எப்படி செய்வார்கள் என்று கேட்டார்.

இந்த சிலை களிமண்ணில் செய்தது. தண்ணீரில் கரைக்க எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்று கூறினேன் மேலும் இந்த சிலையை எதற்குத் தண்ணீரில் போடனும் என்று கேட்டார். அதுதான் முறை என்கிறார்கள். அடுத்த வருஷத்துக்குப் புதிதாக வேறொன்று வாங்குவார்கள் என்றேன்.

கரைப்பதற்கு முன் இந்த சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொடுங்கள் என்று கேட்டார். அவரின் விருப்பத்தின் பேரில் நான்தான் அந்த புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த அந்த சிலையை அவரின் விருப்பத்துக்காக என் ட்விட்டர் பக்கத்தின் பகிரந்தேன். அவ்வளவே’ என்று தன் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே. pic.twitter.com/4s0csUBP43

— Udhay (@Udhaystalin) August 24, 2020

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அண்ணா பல்கலைக்கழகத்தில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு.. முன்னாள் மாணவர்களுக்கு இறுதி அவகாசம்

Next Post

பாசிட்டிவ், நெகட்டிவ் முக்கியமில்லை: எஸ்பிபி மகன் சரண் பேட்டி!

Next Post
SP Balasubrahmanyam Health Condition

பாசிட்டிவ், நெகட்டிவ் முக்கியமில்லை: எஸ்பிபி மகன் சரண் பேட்டி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

October 22, 2026 8:17 PM GMT+5:30

மோடி–டஸ்க் சந்திப்பு: இந்தியா–போலந்து வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு!

October 22, 2026 7:58 PM GMT+5:30

226 ரன்களைத் துரத்தி இந்தியா வெற்றி: நியூசிலாந்துக்கு எதிராக அசத்திய சாம்சன்!

October 22, 2026 5:46 PM GMT+5:30

டைகர் ஷ்ராஃப் மீது தாக்குதல் நடத்த வெளிநாட்டு வேலை ஆசை: விசாரணையில் தகவல்!

October 20, 2026 1:28 PM GMT+5:30

டெல்லி தொழிற்சாலைகளில் தீ விபத்து: காலை 10:30 மணிக்குக் கட்டுக்குள் வந்தது!

October 20, 2026 12:32 PM GMT+5:30

ஆசிய பாரா விளையாட்டு: போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜி!

October 20, 2026 12:17 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version