கடந்த வாரத்தின் அற்புதமான அறிவியல் புகைப்படங்கள்

கடந்த வாரத்தின் அற்புதமான அறிவியல் புகைப்படங்கள்

கடந்த வாரத்தின் அற்புதமான அறிவியல் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு… 

1.உலகின் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழும் Tardigrade எனும் உயிரினத்தை சூரியனுக்கு அனுப்ப வேண்டும் என விநோதமான எண்ணம் பல ஆராய்ச்சியாளர்களும் உண்டு. அதை பிரதிபலிக்கும் விதமாக சூரியனின் சமீபத்திய புகைப்படத்தில் Tardigrade உயிரினத்தைப் போன்றே உருவம் தெரிந்தது, பின்னர் அது Solar Orbiter செயற்கைக் கோளில் ஏற்பட்ட குறைபாடு என தெரிய வந்தது.

2. Hand fish எனப்படும் இந்த வகை மீன்களின் துடுப்புகள் பார்ப்பதற்கு கை போலவே இருப்பதால் இவை அவ்வாறு அழைக்கப்படுகின்றன. அழிந்து வரும் இனமான இவற்றின் கடைசி மீனின் புகைப்படம் இது

 3.சில பல்லிகள் வால்களை இழக்கும்போது, ​​அவை இன்னொன்றை மீண்டும் வளர்த்துக் கொள்ளலாம், சில நேரங்களில் காயமடைந்த பல்லி‌ மேலும் ஒரு புதிய வாலை வளர்த்துக் கொள்ளும், அது ஒன்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக  கூட இருக்கலாம். 

4. ஐஸ்லாந்தின் கிரேட் கெய்சிரிலிருந்து நீராவி உடன் கலந்து , மேலே வானத்தில் மங்கலான பச்சை வண்ண  அரோரா (Arora) மறைகிறது.

5.இதுவரை பார்த்திராத மிகவும் வித்தியாசமான பெரு வெடிப்பு (Super Nova). முழு அளவில் இல்லாமல் பாதி அளவே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது மிகவும் புதுமையாக இருப்பதாக வானியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.   

 6. ஆஸ்திரேலியா வை பிறப்பிடமாகக் கொண்ட Rainbow Bee எனப்படும் வானவில் நிற தேனியின் புகைப்படம்.

7. சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட Kongonaphon kely டைனாசரின் மாதிரி. இது வெறும் 4 இன்ச் அளவே இருந்ததாகவும், கையில் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு சிறிதாக இருந்தது.

 8. வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு சிறிய வயர்லெஸ் கேமராவை உருவாக்கியுள்ளனர், இது வண்டுகளின் பின்புறத்தில் வசதியாக அமரக்கூடியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *