கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது…. 9 ராணுவ வீரர்கள் பரிதாபபலி…

மத்திய அமெரிக்கா நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் பல செயல் பட்டு வருகின்றன. இக்குழுக்கள் அவ்வப்போது கிளர்ச்சிகளை செய்து வருகின்றனர். இந்த குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாய்வியார் மாகாணத்தில் பதுங்கி கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இதற்காக ஹெலிகாப்டரில் 17 வீரர்கள் புறப்பட்டு சென்றனர் வீரர்கள் பயணம் செய்து இந்த ஹெலிகாப்டர் அங்குள்ள இனிரிடா என்ற ஆற்றுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது, இதையடுத்து மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இதில் இனிரிடா ஆற்றுப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 9 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.