பீகாரில் ஆட்சியை பிடிக்கிறது என். டி. ஏ கூட்டணி!!!

பீகாரில் ஆட்சியை பிடிக்கிறது என். டி. ஏ கூட்டணி!!!

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது முதலில் தபால் வாக்குகளும் அதன் பிறகு evm வாக்குகளும் எண்ணப்பட்டன.

இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க. இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் களத்தில் போட்டியிட்டன.

முதல் இரண்டு கட்டங்களில் மெகா கூட்டணி முன்னணி வகுத்தது போக போக பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 125 (பா.ஜ.க. -74, ஜே.டி.யு. -43, வி.ஐ.பி. – 4, ஹெச்.ஏ.எம். – 4)

மெகா கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை-112 :(ஆர். ஜே. டி:75, காங்கிரஸ் :19, சி.பி. ஐ(எம். எல் ):12, சி. பி. ஐ :2, சி. பி. ஐ (எம் ):2

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *