அண்ணன் பேசுனது எல்லாமே நியாயமானது தான்… சீமான் குறித்து அண்ணாமலை

அண்ணன் பேசுனது எல்லாமே நியாயமானது தான்… சீமான் குறித்து அண்ணாமலை

100-நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்திருப்பதில் நியாயம் இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தியாகி குமரனின் 118 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னிமலையில் அவர் வாழ்ந்த இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசியலை பொறுத்தவரையில் மக்களின் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். பாஜக இந்த உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நல்ல வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம்.

இந்த முறை தேர்தலில் போட்டியிட அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம் என தெரிவித்தார். மத்திய அரசு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கொடுத்ததில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஊழல் நடந்திருக்கிறது. 100-நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்திருப்பதில் நியாயம் இருக்கிறது என ஆதரவாக பேசியுள்ளார்.

சமீபத்தில் பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய போது அவருக்கு ஆதரவாக சீமான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *