அந்தர் பல்டி அடித்த அமைச்சர் எ.வ.வேலு

அந்தர் பல்டி அடித்த அமைச்சர் எ.வ.வேலு

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக அரசாங்கம் தான் முடிவெடுக்க முடியும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

எ.வ. வேலு இடங்களில் ரெய்டு.. பின்னணியில் 'அந்த' ஆடியோவா? திமுக தலைமை 'ஷாக்'  | Is there an audio behind for IT raid in dmk candidate ev velu places? -  Tamil Oneindia

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக கடந்த ஆட்சியின் போது விவசாயிகளை, பொதுமக்களை நேரில் அழைத்து பேசவேண்டும். குறைகளை தீர்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினோம். நாங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை. எட்டுவழி சாலைத்திட்டத்தில் பொதுமக்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. விவசாயிகளை அழைத்து பேசுங்கள் என்றுதான் சொன்னோம். அது சட்டமன்ற குறிப்பில் உள்ளது. இது ஒரு கொள்கை முடிவு. இந்த விவகாரத்தில் அமைச்சர் முடிவு எடுக்க முடியாது. அரசாங்கம்தான் முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தார்.

முன்னதாக, இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *