சசிகலாவிற்கு ஆதரவு வழங்கும் திமுக.. முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!!

சசிகலாவிற்கு ஆதரவு வழங்கும் திமுக.. முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!!

அஇஅதிமுக சார்பில் சசிகலா நடராஜன் மீது மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை: கடந்த 17.10.21ம் தேதி அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு . V.K.சசிகலா அவர்கள், தி.நகர், ஆற்காடு தெருவில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில், இருந்த கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி, கழக பொதுசெயலாளர் என அச்சிடப்பட்ட கல்வெட்டு திறந்து வைத்தார்கள்.இதனை கண்டித்து அதிமுக கட்சியின் கழக அமைப்பு செயலாளர் திரு.ஜெயகுமார், கழக சட்ட அலோசனை குழு உறுப்பினர் திரு.பாபு முருகவேல் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் பாபு முருகவேல் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் R1 மாம்பலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அவர்களிடம் புகார்மனு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்* சசிகலா நடராஜன் சட்டப்படி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர் என்றும் இது தொடர்பாக அதிமுகவிற்கும் அவருக்கு இரட்டை இலை சின்னத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளி வந்துள்ள நிலையில் சட்டத்தை மீறி சசிகலா நடராஜன் திமுகவுடன் இணைந்து அதிமுகவை வீழ்த்த சதி செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் அனுமதியின்றி சட்டத்தை மீறி அவரது காரில் அதிமுக கொடியுடன் வலம் வருவதாக குறிப்பிட்டார். ஏதோ சசிகலாதான் அதிமுகவை உருவாக்கியது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி வருவதாகவும் அனுமதியின்றி பொன்விழாவை ஒட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் கொடியேற்றியுள்ள செயல் மாபெரும் கண்டனத்துக்குரியது எனவே அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் வந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *