இருமொழி கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு-அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இருமொழி கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு-அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இருமொழி கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
‘நிவா்’ புயல் வந்த போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்களது பயணங்கள் மக்களை நோக்கி செல்கிறது. மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிற அரசாக திகழ்கிறது. அதற்காக நாங்கள் அரும்பணியாற்றி வருகிறோம். நம்பியூர் பஸ் நிலையம் கட்டுவதில் முறைகேடு என கனிமொழி எம்.பி. பேசி உள்ளார்.

இருமொழி கொள்கை
அவர் எப்படி பேசுவதென்பது என தெரியாமல் பேசுகிறார். ஒன்று கொள்கை ரீதியாக பேசவேண்டும். அல்லது செய்கின்ற பணிகளை தெரிந்து பேச வேண்டும். எதுவும் தெரியாமல் பேசி உள்ளார்.
தமிழக அரசை பொறுத்தவரை இருமொழி கொள்கை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. இதுபற்றி மத்திய அரசுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் ஒருங்கிணைந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அதுகுறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *