பால சாகித்ய விருது மற்றும் யுவபுரஸ்கார் விருதுகள் அறிவிப்பு

பால சாகித்ய விருது மற்றும் யுவபுரஸ்கார் விருதுகள் அறிவிப்பு

சாகித்ய அகாதமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது  எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி பால புரஸ்கார், யுவ புரஸ்கார்  விருதுகள் அறிவிப்பு… | www.patrikai.com

1957ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாகித்ய அகாடமி என்னும் ஒரு அமைப்பு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்திய மொழிகளில் உள்ள இலக்கியம், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அது தொடங்கப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, இந்திய மொழியில் வெளிவரும் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குவதுடன், மற்ற மொழிகளில் மொழி பெயர்த்தும் வெளியிடுகிறது.

அந்த வகையில், இளம் தமிழ் எழுத்தாளர்களுக்கான யுவ புராஸ்கர் விருது எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ’தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதை தொகுப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுகதைகளுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ’மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு ₹50,000 ரொக்கத்துடன் விருது வழங்கப்படுகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *