சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை…

சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை…

மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது.
பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்துவருகிறது.இதனால் தாழ்வான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னையில் திருவல்லிக்கேணி,கிண்டி, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அடையாறு, கிரீன்வேஸ் சாலை, அண்ணாசாலை, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, கோட்டூர்புரம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

காலை முதலேயே பெய்துவரும் கனமழை காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோரும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *