எத்தனை விலையில்லா மடிக்கணினி திருடு போயுள்ளது விவரங்களை தெரிவிக்குமாறு பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்!!

எத்தனை  விலையில்லா மடிக்கணினி  திருடு போயுள்ளது விவரங்களை தெரிவிக்குமாறு  பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்!!
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி திட்டம்  சார்பாக  அனைவருக்கும் மடிக்கணினி( லேப்டாப்) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் லேப்டாப்பை பள்ளிகளில் இருந்து  மர்ம நபர்கள்திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதனடிப்படையில், தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில், மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா  மடிக்கணினிகள்  திருடு போனதை பற்றி அனைத்து விவரங்களையும் தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

எனவே, வருடங்கள் வாரியாக இதுவரை எத்தனை லேப்டாப்கள் திருடு போகின்றன என்ற எண்ணிக்கையும் பள்ளிகளின் பெயர் காவல்துறையில் அவர்கள் பதிந்த முதல் தகவல் அறிக்கை, புகாரில் தெரிவித்துள்ள விவரம், புகார் மூலமாக மீட்கப்பட்ட மடிக்கணினிகள் எத்தனை என்ற விவரமும் தொலைந்து போன லேப்டாப் களுக்காக அரசு கணக்கில் அவர்கள் செலுத்திய விபரமும் அனுப்ப வேண்டும் என்று  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *