Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஒரே ஒரு போன் கால் போதும்…. ஸ்பாட் நடவடிக்கை பாயும்… அமைச்சர் நாசர் அதிரடி…!

May 25, 2021

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 24ம் தேதி வரை தமிழக அரசு ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கை பிறப்பித்தது. ஆனால் தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தியதால் கொரோனா தொற்று பரவல் கிடுகிடுவென அதிகரித்து. எனவே மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்துள்ள தமிழக அரசு, எவ்வித தளர்வுகளும் கிடையாது என ஸ்ரிக்ட் உத்தரவு போட்டுள்ளது. இந்த சமயத்தில் பால், தண்ணீர், காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பால் விநியோகத்தை பொறுத்தவரை பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் எவ்வித தடையும் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் முழு ஊரடங்கைப் பயன்படுத்தி பால் விலையை அதிகரித்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் சீரான பால் விநியோகத்திற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் முககவசம் கட்டாயமா?

அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் ஒட்டப்படும் நோட்டீஸ்

5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

* சென்னை மாநகரில் சுமார் 1,000 பால் டெப்போக்கள் மூலம் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது. மேலும், ஆவின் நிர்வாகத்தால் 38 பாலகங்கள் மூலம் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, நகரின் பிரதான பகுதிகளில் 156 ஆவின் பாலகங்கள் முகவரால் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கூறிய அனைத்துப் பாலகங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

* மேலும் ஊரடங்கைக் கருத்தில் கொண்டு சென்னை புறநகர் பகுதிகளில் பால் விநியோகம் செய்வதற்காக 20 நடமாடும் பால் விற்பனை வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

* நகரின் முக்கியப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட தற்காலிக பால் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டும் இல்லாமல், 27 வட்டார அலுவலகங்கள் மற்றும் 48 பால் கூட்டுறவு நுகர்வோர் சங்கங்கள் தற்காலிக பால் விற்பனை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

* இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் விற்பனை வாகனம் மற்றும் தற்காலிக விற்பனை மையம் அமைத்துப் பொதுமக்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றி பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட ஆவின் பாலகங்களில் போதிய பால் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

* நீண்ட நாட்கள் கெடாத டெட்ரா பேக் பால் பாக்கெட்டுகளை அனைத்து ஆவின் பாலகங்களிலும் போதிய இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* ஆவின் பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்குப் பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக சொமேட்டொ மற்றும் டன்சோ நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினந்தோறும் 600-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் நுகர்வோர்கள் மூலம் பெறப்பட்டு, ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* சென்னை மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற சென்னை மாநகரிலுள்ள அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

* பொதுமக்களுக்குப் பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதைக் கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் பகுதி வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:044-23464575, 23464576, 23464578 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3300.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கருப்பு பூஞ்சை வரிசையில் ஆபத்தை தரும் மஞ்சள் பூஞ்சை – மருத்துவர்கள் எச்சரிக்கை

Next Post

மிரட்டும் யாஸ் புயல் – மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

Next Post

மிரட்டும் யாஸ் புயல் - மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version