தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஸ்டிரைக்… தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூல்…!!!

தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஸ்டிரைக்… தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூல்…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் போடாததால் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.

அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஊதிய உயர்வு மற்றும் பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

அதன்படி சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. அதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெளியூர்களில் இருந்து ரயில் மூலம் வந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிரமத்திற்கு ஆளாகியுள்ள பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *