அமெரிக்க மருத்துவக்கழக மருத்துவ இதழான (JAMA )Journal of American Medical Association இல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒரு ஆய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Face shield எனும் முகக்காப்பான் பயன்படுத்தும் மருத்துவ ஊழியர்களிடையே தொற்று ஏற்படும் வாய்ப்பும் பரவும் வாய்ப்பும் குறைகிறது என்று ஆய்வு முடிவு தெளிவாக தெரிவிக்கின்றது.
எதிரே நின்று பேசுபவரின் வாயில் இருந்து வரும் சளி, எச்சில் போன்றவை முகத்தில் நேராக படாமல் இந்த முகக்காப்பான் முழுவதுமாக காக்கின்றது
மேலும் அடிக்கடி நம் கையை வைத்து முகத்தை தொடும் வாய்ப்பை முற்றிலும் குறைத்து விடுகின்றது
இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது யாதெனில்
” முகக் காப்பான் அணியாமல் வீடு வீடாக கொரோனா குறித்த தகவல் சேகரிக்கச் சென்ற மருத்துவ ஊழியர்கள் 62 பேரில் 12 பேருக்கு கொரோனா தொற்று தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அவர்கள் தகவல் சேகரிக்கச் சென்ற 5880 வீடுகளில் சந்தித்த 31180 நபர்களில் 222 பேருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது.
இதே முகக் காப்பான் அணிந்து சென்ற 50 மருத்துவ ஊழியர்கள் 18228 வீடுகளுக்கு சென்று தகவல் சேகரித்தனர். 118428 பேரை சந்தித்தனர். அவர்களுள் 2682 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது
இருப்பினும் முகக் காப்பான் அணிந்து சென்ற 50 மருத்துவ ஊழியர்களுள் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஆய்வு முடிவு.
இந்த ஆய்வைச் செய்தது நமது சென்னையைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் – ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவப் பேராசிரியர் Dr. இமானுவேல் பாஸ்கர் MD மற்றும் சமூக ஆராய்ச்சி வலையமைப்பைச் சேர்ந்த Dr. சந்தானம் அருண் MBBS ஆகிய இரண்டு மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
போரில் களத்தில் போராடும் ராணுவ வீரர்கள் எப்போதும் குண்டு துளைக்காத கவச உடையை பயன்படுத்துவார்கள் தற்போது நாம் நம் கண்களுக்குத் தெரியாத எதிரியான கொரோனாவுக்கு எதிராக போரில்தான் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம் ..எனவே மருத்துவத் துறை மட்டுமின்றி காவல் துறை ,சுகாதாரத் துறை, முன் களப்பணியாளர்கள், அரசாங்க துறை சார்ந்த அதிகாரிகள் என மக்களை சந்திக்கும் பிரதிநிதிகள் அனைவரும் இந்த Face shield எனும் முகக்காப்பான் பயன்படுத்துவது நாட்டுக்கு மட்டுமின்றி அவர்களின் சார்ந்தவர்களுக்கும் நன்மை தரும்..தமிழக அரசு இதை உடனே உத்தரவிட்டு செயல்படுத்த வேண்டும்.