நிவர் புயல் சேதாரங்களை கணக்கிட இன்று விரைகிறது மத்திய குழு

நிவர் புயல் சேதாரங்களை கணக்கிட இன்று விரைகிறது மத்திய குழு
நிவர் புயல் சேதாரங்களை கணக்கிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.

சென்னை:

கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான நிவர் புயல் பலத்த காற்று மற்றும் மழையுடன் பாண்டிச்சேரி அருகே கரையை கடந்தது.இந்த நிவர் புயலின் தாக்கத்தால் பாண்டிச்சேரி உள்பட சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கடலூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்து,சாலைகளையும் குளமாக்கியது.மேலும் நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்தும், 3 பேர் காயமடைந்தனர்.அதுமட்டுமில்லாமல் ஆங்காங்கே மரங்கள் சரிந்து பெரும் நாசத்தையும் வெளிப்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து தமிழக அரசு தமிழகத்தில் சேதமான விவரங்களை அண்மையில் வெளியிட்டது.இந்நிலையில்,நிவர் புயல் சேதாரங்களை கணக்கிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளனர். அவர்கள் நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *