தந்தையை ஏமாற்றிய மகள்..ஊர் முழுக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..

தந்தையை ஏமாற்றிய மகள்..ஊர் முழுக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..
தேனியில் காதல் திருமணம் செய்துகொண்டதற்காக மகள் உயிருடன் இருக்கும்போதே, அவருக்கு தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை சேர்ந்த ஜெயபால் – செல்வி தம்பதியர், பெங்களூரில் குடும்பத்துடன் வேலை பார்த்து வரும் நிலையில் இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்த ஒருவருடன், மகள் கீர்த்தனாவிற்கு திருமணம் செய்து வைப்பதற்காக சொந்த ஊரான வேப்பம்பட்டி கிராமத்திற்கு ஜெயபால் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.

திருமணத்திற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடக்க , கடந்த புதன்கிழமை அன்று திருமணம் நடைபெறுவதாக உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் கிளம்பிய கீர்த்தனா வீடு திரும்பவில்லை. இதையடுத்து, மகள் வீடு திரும்பாததால் கீர்த்தனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை தேட தொடங்கியுள்ளனர். விசாரித்தத்தில், மகள் வேறு ஒரு பையனுடன் சென்று விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததன் அடிப்படையில், கீர்த்தனாவையும் கீர்த்தனாவை அழைத்துச் சென்றவரையும் அழைத்து போலீசார் விசாரிக்கும்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை ஜெயபால் தனது மகள் இறந்து விட்டதாக கூறி, தனது சொந்த ஊரில் தன் மகள் கீர்த்தனா இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டியுள்ளார். மகள் உயிருடன் இருக்கும் பொழுதே வேறு ஒருவரை காதல் திருமணம் செய்ததால், தந்தையே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டி இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *